செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (21:12 IST)

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 18 ஆம் தேதி சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பலத்தை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி அனைத்து அலுவலர்களும் அதிக கனமழை பெய்தால் எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில். சென்னையில் நாளை அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, திருவள்ளூர், ராணிப்பேட்டை,ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.