வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (17:06 IST)

சிறுநீர் கழித்ததால் வாக்குவாதம்: மாணவன் கொலை!

சிறுநீர் கழித்ததால் வாக்குவாதம்: மாணவன் கொலை!

திருச்சியில் வெட்டவெளியில் மாணவன் ஒருவன் சிறுநீர் கழித்ததால் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த மாணவனின் நண்பன் மற்றும் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
திருச்சி அருகே உள்ள பொன்மலைப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு ரியாஸ் ராஜூ என்ற நண்பர் ஒருவர் இருந்துள்ளார். இதனையடுத்து ரியாஸை சந்திக்க கார்த்திகேயன் அவரது வீட்டுக்கு கடந்த புதன் கிழமை சென்றுள்ளார்.
 
ஆனால் ரியாஸ் அங்கு இல்லாததால் கார்த்திகேயன் தனது வீட்டுக்கு திரும்பும் போது ரியாஸ் வீட்டுக்கு வெளியே சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனை ரியாஸின் மாமா லட்சுமணன் கண்டித்துள்ளார். இதனால் லட்சுமணனுக்கும் கார்த்திகேயனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
 
இதனையடுத்து பின்னர் கார்த்திகேயனை அவரது வீட்டிற்கு வந்து ரியாஸ் பார்த்துள்ளார். அப்போது ரியாஸ் கார்த்திகேயனை பிடித்துக்கொண்டிருக்க அவரது மாமா லட்சுமணன் கார்த்திகேயனின் வயிறு மற்றும் மார்பில் கத்தியால் குத்தியுள்ளார்.
 
இதனால் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கொலை செய்த லட்சுமணன் மற்றும் ரியாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.