வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2017 (14:45 IST)

தமிழகத்தை தத்தெடுத்த நரேந்திர மோடி; தமிழக அரசை வலியுறுத்திய பொன்.ராதாகிருஷ்ணன்

நரேந்திர மோடி தமிழகத்தை தத்தெடுத்தது போன்று இங்கு எராளமான புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


 

 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
 
தமிழகத்தில் ரூ.100 செலவில் 15 ரயில்வே திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை - குமரி மற்றும் குமரி - திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்தை ரூ.3940 கோடியில் செயல்படுத்த மத்திய அரசு முன் வந்துள்ளது. 
 
தமிழகத்தை நரேந்திர மோடி தத்தெடுத்தது போல் புதிய திட்டங்களை தந்து வருகிறார். மேலும் சென்னை - குமரி 4 வழிச்சாலை அமைக்க தமிழக அரசு உடனடியாக நிலத்தை தர வேண்டும் என்றார்.