புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2017 (14:24 IST)

இது வெறும் கண் துடைப்பு - ஆனந்தராஜ் அதிரடி பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்துள்ள விசாரணைக் குழுவால் எந்த உண்மையும் வெளிவரப்போவதில்லை என நடிகர் ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.


 

 
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு, பிரச்சார பேச்சாளராக வலம் வந்தவர் நடிகர் ஆனந்தராஜ். ஆனால், ஜெ. மறைந்த பின், அவரின் தோழி சசிகலாவின் தலைமையை ஏற்க பிடிக்காமல் அதிமுகவிலிருந்து விலகினார். அதன்பின்,  முக்கிய சம்பவங்கள் நடைபெறும்போது கருத்துக்கள் தெரிவித்து வந்தார்.
 
சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி சில அறிவிப்புகளை அறிவித்ததையடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஆனந்தராஜ்  “எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கும் விசாரணைக் கமிஷன் மக்களுக்கு மிகப்பெரிய கண் துடைப்பாக இருக்கும். இதன் மூலம் எந்த புதிய தகவலும் வெளியாகப்போவதில்லை. இரு அணிகளும் தங்களின் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவே திட்டமிடுகிறார்கள். 
 
ஜெ.வின் மர்ம மரணத்தை பற்றிய உண்மையான அக்கறை இருந்திருந்தால் இதை முன்பே அறிவித்திருக்க வேண்டும். இது போன்ற விசாரணைக் கமிஷனால் இதுவரை எந்த வழக்கும் முடிவிற்கு வந்ததில்லை. மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தால் மட்டுமே இந்த விசாரணைக்கு ஒரு அர்த்தம் இருக்கும்” என அவர் கூறினார்.