1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. savukku sankar says about dravidan

திராவிட ஆட்சி பெயரில் ஒரு குடும்பம் கொள்ளை அடிக்கிறது: சவுக்கு சங்கர்

savukku
திராவிட ஆட்சி என்ற பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தை கொள்ளை கொண்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்றும் அதை பற்றி பேசியதால் தான் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சவுக்கு சங்கர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் அந்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் திடீரென சவுக்கு சங்கர் 4 வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமினும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற விசாரணை முடிந்ததும் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது திராவிட ஆட்சி என்ற பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தையே கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என்றும் அதைப் பற்றி பேசினால் தான் தன் மீது வழக்கு பதிந்து உள்ளது என்றும் அவர் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
செல்போன் கடைக்குள் புகுந்து கூலாக திருடிய நபர்..சிசிடிவி காட்சி வெளியீடு