1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:51 IST)

முன் ஜாமின் வழங்க முடியாது, சரணடையுங்கள்: ப்ரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு உத்தரவு

court
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் முன்ஜாமீன் வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது கவனக் குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டதன் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளது 
 
இந்த வழக்கில் தங்களை கைது செய்யக் கூடாது என முன்ஜாமீன் கேட்டு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கால்பந்து வீராங்கனை உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்றும் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என்றும் வேண்டுமானால் சரணடையுங்கள் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்
 
நூற்றுக்கணக்கான மிரட்டல்கள் வருகின்றன என்றும், சரணடைய செல்வதற்கு பயமாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்ததையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் விரைவில் சரண் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran