புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (07:35 IST)

பாண்டேவை வேலையை விட்டு நீக்கியதா தந்தி டி.வி? –அதிர்ச்சியளிக்கும் புதுத்தகவல் !

தந்தி டி.வியின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகிவில்லை. தந்தி டிவி குழுமத்தால் நீக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தந்தி டிவியின் தலைமை செயல் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடிரெனத் தனது பதவியை ராஜினாமா செய்தது சமூக வலைதளங்களில் பெரும் விவாதமானது. இந்த ராஜினாமாவுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு விவாதமாகின. இதனால் பாண்டே ஒரு வீடியோ மூலம் தனது முடிவுக்கு விளக்கம் அளித்திருந்தார்.

அந்த வீட்டியோவிலி ‘ நான் தந்தி டி.வி. யின் தலைமை செய்தி ஆசிரியர் பதவியில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால் ஊடகத்துறையில் இருந்து விலகவில்லை. நான் தொடர்ந்து ஒரே வேலையை செய்வதால் ஏற்படும் அயர்ச்சியின் காரணமாகதான் எடுத்துள்ளேன். தந்தி டிவி குழுமத்தோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் என்னை ராஜாவைப் போல பார்த்துக் கொண்டார்கள். என்னுடைய ராஜினாமாவால் இளைஞர்களுக்கான வாய்ப்பு அதிகமாகும் என நம்புகிறேன். இந்த முடிவை தந்தி குழுமமும் பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டது. இது புரிதலோடு எடுக்கப்பட்ட ஒரு பிரிதல். அடுத்து என்ன செய்யப்போகிறேன் என தெரியவில்லை. எனது இத்தனை வருட ஊடக வாழ்க்கையில் அதிகமாக சம்பாதித்தது உங்களைத்தான். உங்களை என்றும் இழக்க மாட்டேன். பயணங்கள் எப்படி அமையும் எனத் தெரியவில்லை. மீண்டும் சந்திப்போம்.’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் பாண்டே ராஜினாமாவுக்கான உண்மையானக் காரணம் வேறு என இப்போது ஒருப் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பத்திரிக்கையாளரும் சவுக்கு இணையதளத்தின் ஆசிரியமருமான சவுக்கு சங்கர் பாண்டே பதவி நீக்கம் குறித்து தனது முகநூலில் ஒரு கருத்தினைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘ஒரு நெருக்கடியான சூழலில்( சில மாதங்களுக்கு முன்பு ) தற்போதைய எடப்பாடி அரசு அவரை நீக்க வேண்டும் என்று தந்தி டிவி நிர்வாகத்துக்கு நெருக்கடி அளித்து, அதன் பேரில் அவர் ராஜினாமா செய்தார் என்ற செய்தியை பதிவிட்டேன்.

அந்த செய்தியை பல பேரிடம் விசாரித்து உறுதி செய்த பின்னரே பதிவிட்டேன். அந்த செய்தியை பாண்டே “சாரே” மறுக்கவில்லை. ஓரிரு நாட்களில் அவர் மீண்டும் தந்தி டிவியில் பணியில் சேர்ந்தார். என்னிடம் தகவல் சொன்னவரிடம் இது குறித்து அப்போது நான் கேட்டேன்.

“பாஸ் தந்தி டிவி மேனேஜ்மென்டை பத்தி உங்களுக்கு தெரியாது. சரியான சமயம் வரும்போது கழட்டி விடுவாங்க“ என்று சொன்னார். 

அப்போது அவர் பாண்டே, தந்தி டிவியில் தொடர காரணம் என்ன என்பதையும் சொன்னார். 

அதாவது, தந்தி டிவி குழுமத்தை சேர்ந்த ஒரு வாரிசு, மோடி சென்னை வந்தபோது அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாரிசு, லண்டனில் ஒரு சொத்தை வாங்கியிருப்பதாகவும், அதற்கு வெள்ளையில் பணம் கொடுக்க தாமதமானதால், தந்தி டிவி குழுமம் பாண்டேவின் உதவியை அணுகியதாகவும், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிம்மியின் உதவியோடு, ஒரு ஆயுத வியாபாரியை அந்த தொகையை லண்டனில் கொடுக்க வைத்தார் என்றும், நிம்மி(மத்திய அமைச்சர் நிர்மலா தேவி) தந்தி டிவியில் பாண்டேவின் வேலையை காப்பாற்றுவார் என்றும் கூறினார். 

இந்த தகவலை என்னால் எப்படி Verify செய்ய முடியும் ? அப்போதெல்லாம் எனக்கு RAW அமைப்பில் அத்தனை தொடர்புகள் இல்லை.  என் செய்தி பொய் என்ற போதெல்லாம் அமைதியாக இருந்தேன். எனக்கென்ன இழப்பு இருக்கிறது. பாண்டேவும் அமைதியாகவே இருந்தார். இன்று பாண்டேவை நோட்டீஸ் பீரியட் கூட இருக்க வேண்டாம். நாளை முதல் அலுவலகத்துக்கு வராதீர்கள் என்று தந்தி டிவி நிர்வாகம் கூறி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் பாதிக்கப்பட்டது பாண்டேதான். நிர்வாகம் சொன்னதைத்தான் அவர் செய்தார். அவர் எதற்காக வெளியேற்றப்பட்டார் என்பதை , சில வாரங்களில் பாண்டேவே சொல்வார். காத்திருங்கள்.

ஆனால் எனக்கு அவர் மீது பரிதாபம் வரவில்லை சின்ன சங்கராச்சாரி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதபோது, அந்த விடியோடிவை தந்தி டிவி வெளியிடாத காரணத்தால் அதை மற்றொரு சேனலுக்கு அளித்த செய்தியாளரை வேலையை விட்டு அனுப்பியவர்தான் இந்த பாண்டே. 

அவர் திரைத் துறைக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.’ என அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.'