திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 12 டிசம்பர் 2018 (19:09 IST)

தினகரனுக்கு பேரிடி; அதிமுகவிற்கு அவமானம்: திமுகவில் இணையும் செந்தில் பாலாஜி!

அதிமுக முன்னாள் அமைச்சரும், தினகரனின் நம்பிக்கைகுரிய ந்பரனாக செந்தில் பாலாஜி திமுகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படங்களும் தகவல்களும் கிடைத்துள்ளன. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த அரசியல்  பிரச்சனைகளால் டிடிவி தின்கரன் ஆதரவாளராக அவருக்கு நம்பிக்கையானவராக் உருவாகினார். 
 
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தினகரன் அணிக்கு எதிராக வந்ததாலும், தினகரனின் சில செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதாலும் இவர் திமுகவில் இணைய உள்ளார் என கூறப்பட்டது. 
தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஆ.ராசா மற்றும் செந்தில் பாலாஜி ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 
 
அதே போல் கரூர் சின்னசாமி, என்னுடைய தலைமையில்தான் செந்தில் பாலாஜி நாளை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைகிறார் என தெரிவித்துள்ளார். 
 
இந்த விஷயத்தால் அதிர்ச்சியில் தினகரன் ஒருபுறமும், எதிர் கட்சி சேர துணிந்தவருக்கு எனது கட்சி சேர தோணவில்லை என்ற அவமானத்தில் அதிமுகவினரும் உள்ளனராம்.