'தந்தி டிவி' ரங்கராஜ் பாண்டே ராஜினாமாவா?
பிரபல பத்திரிகையாளரும் தந்தி டிவியின் முதன்மை செய்தியாளருமான ரங்கராஜ் பாண்டே ராஜினாமா செய்துவிட்டதாக இணையதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இருப்பினும் இந்த தகவலை தந்தி டிவி நிர்வாகமோ அல்லது ரங்கராஜ் பாண்டேவோ உறுதி செய்யவில்லை. இருப்பினும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து இந்த தகவல் வந்துள்ளதால் சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரங்கராஜ் பாண்டே தனிச்சேனல் ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகிறது. அதுமட்டுமின்றி ரங்கராஜ் பாண்டே ரஜினிக்கு அரசியல் ஆலோசகராக சேரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ரங்கராஜ் பாண்டே ராஜினாமாவால் தந்தி டிவிக்கு இழப்பா? அல்லது தந்தி டிவியில் இருந்து விலகியதால் ரங்கராஜ் பாண்டேவுக்கு இழப்பா? என்பது போகபோகத்தான் தெரியவரும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.