தொடர்புடைய செய்திகள்
- எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு!. விஜய் திடீர் அறிவிப்பு..
- சினிமாவில் மட்டும் இல்லை.. நிஜத்திலும் 10 பேரை அடிப்பாரு விஜய்! சீக்ரெட்டை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
- இப்போதுதான் சைக்கிள் ஓட்டவே ஆரம்பித்துள்ளார் - விஜய்யை கடுமையாக விமர்சித்த நடிகை ஆர்த்தி
- ரோட்டில் பிரச்சாரம் பண்றது பழைய ஃபார்மேட்!.. இப்படி சொல்லிட்டாரே விஜய்!..
- கொளத்தூர், திருவல்லிக்கேணி தொகுதி பக்கம் போகாதது ஏன்?.. விஜய் பதில் சொல்வாரா?..
ஜெயலலிதாவை ஆண்டி என அழைத்திருந்தால் கொத்து பரோட்டாதான்! விஜய்யை விளாசிய சத்யராஜ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. ஆளுங்கட்சியான திமுகவுக்கும், புதிதாக அரசியல் களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் உச்சக்கட்டத்தை எட்டி வருகிறது.
திரையுலகிலிந்து விலகி விஜய், திரைப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது முழு நேர அரசியலில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர், தனது பிரச்சார வியூகத்தில் பிற எதிர்க்கட்சிகளை விட ஆளுங்கட்சியான திமுகவையே பிரதான இலக்காகக் கொண்டு விமர்சித்து வருகிறார்.
தொடக்கத்தில் அரசியல் மேடைகளில் பேசும்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 'ஸ்டாலின் அங்கிள்' என்று கூறிவந்தார். ஆனால் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே தற்போது ஸ்டாலின் சார் என்று கூறி வருகிறார்
இந்த சூழ்நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்களும், திரைப்பிரபலங்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட மூத்த நடிகர் சத்யராஜ், தவெக தலைவர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தலைவாதிரைப்படத்திற்கு பெரிய சிக்கல் வந்தபோது, விஜய் நேராக கொடநாட்டிற்குச் சென்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், 'அம்மா... ரொம்ப மன்னிச்சிடுங்க அம்மா, எப்படியாவது என் படத்தை ரிலீஸ் பண்ணுங்க அம்மா' என்று மிகவும் பவ்யமாக, மரியாதையாகப் பேசினார். அப்படிப் பேசியவர், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 'அங்கிள்' என்று அழைக்கிறார். அவர் இப்படி பேசுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
இங்கே ஸ்டாலினை 'அங்கிள்' என்று அழைத்தது போல, அங்கு போய் ஜெயலலிதாவை 'ஆண்டி' என்று கூப்பிட்டிருந்தால் ரோட்டோரக் கடைகளில் போடுவது போல கொத்து பரோட்டாதான் போட்டிருப்பார்கள் என தெரிவித்தார்.
சத்யராஜின் இந்த ஆவேசமான பேச்சு தற்போது இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. தேர்தல் களத்தில் திரைப்பிரபலங்கள் ஒருவரையொருவர் நேரடியாக விமர்சித்துக் கொள்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
