ஊரடங்கால் வருமானவில்லை: 3 குழந்தைகளின் தாய் ஏரியில் விழுந்து தற்கொலை
3 குழந்தைகளின் தாய் ஏரியில் விழுந்து தற்கொலை
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், வேலையின்றி வருமானம் இன்றி இருந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான 25 வயது பெண் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஆவடி அருகே புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவரது கணவர் பாலாஜி, கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக வேலை இல்லை. இதனால் அந்த குடும்பம் வறுமையில் வாடியது
மூன்று குழந்தைகளுக்கு தாயான புவனேஸ்வரி வறுமை காரணமாக விரக்தியில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது. தனது மூன்றாவது குழந்தையை மட்டும் அழைத்துக் கொண்டு அவர் திடீரென மாயமானதாக தெரிகிறது
இதனையடுத்து அவரை உறவினர்கள் தேடியபோது மறுநாள் காலை ஏரியில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அவருடன் சென்றதாக கூறப்படும் 9மாத குழந்தையின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து செய்து வருகின்றனர். ஊரடங்கால் ஏற்பட்ட வறுமை காரணமாக மூன்று குழந்தைகளின் தாய் ஒருவர் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது