1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூன் 2020 (16:25 IST)

ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலையாகும் 64 பேர்… சசிகலா பெயர் இல்லை – அதிர்ச்சி தகவல்!

ஆகஸ்ட் 14 ஆம் தேதி சசிகலா விடுதலையாக இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.

அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகர் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்களது தண்டனை காலம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. ஆனால் நன்னடத்தை மற்றும் சுதந்திர தினம் காரணமாக அவர் 6 மாதம் முன்கூட்டியே விடுதலையாகலாம் என்ற செய்தி நேற்று இரவு சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது.

ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏனென்றால் ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலையாகும் 64 பேர் கொண்ட பட்டியலை பரப்பன அக்ரஹார சிறை வெளியிட்டுள்ளது. அதில் சசிகலாவின் பெயர் இல்லை. இதனால் சசிகலா விடுதலை சம்மந்தமாக குழப்பமான சூழல் நிலவுகிறது.