வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 ஜூலை 2021 (09:31 IST)

செய்தியாளர்களுக்கு சென்னையில் தடுப்பூசி முகாம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு சென்னையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜூலை 6ம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் அனைத்து செய்தியாளர்கள், பத்திரிக்கை நிருபர்களும் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.