1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (11:02 IST)

என் பிறந்த நாளில் யாரும் வீட்டுக்கு வர வேண்டாம்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

Sasikala
என் பிறந்தநாளில் தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் என்றும் சிரமப்பட்டு எனது இல்லத்துக்கு வருவதை தவிர்த்து விட்டு உங்கள் பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யவும் என்றும் சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இன்று சசிகலாவின் பிறந்தநாளை அவரது கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வரும் நிலையில் இதுகுறித்து சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் நானே விரைவில் உங்களை எல்லாம் நேரில் சந்திக்க தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வர இருக்கிறேன் என்றும் உங்களை எல்லாம் காண இருக்கிறேன் என்றும் எனவே தற்போது நீங்கள் எனது பிறந்த நாளுக்காக சிரமப்பட்டு பயணம் செய்து எனது இல்லம் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
எனது இல்லத்திற்கு வருவதற்கு பதிலாக உங்கள் பகுதியில் இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்றஅளவில் நீங்கள் செய்த உதவிகளே நீங்கள் எனக்கு அளிக்கின்ற சிறந்த பிறந்தநாள் பரிசு என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் பொறுமையுடன் தொண்டர்கள் காத்திருங்கள் என்றும் ஒளிமயமான எதிர்காலம் நம் கண்முன்னே காத்திருக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்