வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (19:48 IST)

நாளை தலைமைக்கழகத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறேன்: விஜயகாந்த் அறிவிப்பால் தொண்டர்கள் மகிழ்ச்சி

vijayakanth
நாளை 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக தலைமை கழகத்தில் தேசியக் கொடியை ஏற்றுகிறார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கூறியிருப்பது தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் நாளை காலை எட்டு முப்பது மணிக்கு எனது கரங்களால் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த நிகழ்ச்சியில் தேமுதிக கழக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், மகளிரணி, தொழிற்சங்கம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நமது நாட்டுப் பற்றை பறைசாற்றும் வகையில் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமென்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
 
நாளை தலைமைக்கழகத்தில் விஜயகாந்த் தேசியக்கொடியை ஏற்றவிருக்கின்றார் என்ற தகவல் தேமுதிக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.