''அஜித்61'' படத்தின் தலைப்பு இதுதான்! நாளை போஸ்டர் ரிலீஸ்?
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில், ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுவருகிறது
சில நாட்களுக்கு முன், ஐரோப்பியா சுற்றுப்பயணம் முடித்து, இந்தியா திரும்பிய அஜித்குமார், திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இதையடுத்து, அஜித், தற்போது அஜித்61 படக்குழுவுனருடன் இணைந்துள்ளார்.
இதற்காக நேற்று மீண்டும் ஐதராபாத் சென்றுள்ள அஜித்குமார், அங்கு பிரபல ஹோட்டலுக்கு சென்றபோது, ஹோட்டல் ஊழியர்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்தப்புகைப்படங்கள் வைரலானது.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் 2 வேடங்களில் நடித்து வருவதாகவும், இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பரில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அஜித் நடிக்கும் படங்களில் வீரம், விவேகம், வேதாளம், வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜித் 61 படத்திற்கு வல்லமை என்று பெயரிட்டுள்ளதாகவும், தயாரிப்பாளர் போனிகபூரின் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு,ம் நாளை இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
ஆனால் படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.