திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (19:11 IST)

தேசியக்கொடியை ஏற்றி வைத்த விஜய்காந்த்: தொண்டர்கள் கண்ணீர்!

vijayakanth flag
தேசியக்கொடியை ஏற்றி வைத்த விஜய்காந்த்: தொண்டர்கள் கண்ணீர்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைக்க தலைமைக் கழகத்திற்கு வந்தபோது அவருடைய நிலைமை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் சிந்திய காட்சி பெரும் உருக்கமாக இருந்தது. 
 
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்துக்கு வந்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார் 
 
நீண்ட நாட்களுக்கு பின்னர் விஜயகாந்தை நேரில் பார்த்ததில் தொண்டர்களுக்கு சந்தோஷம் என்றாலும் அவரது உடல்நிலையை பார்த்து தாங்கள் மிகுந்த கவலைப்படுவதாக தொண்டர்கள் கண்ணீருடன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
விஜயகாந்த் அவர்கள் பூரண நலம் பெற்று விரைவில் அரசியல் களத்துக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை ஈடுபடுவதாக தொண்டர்கள் உருக்கமாக தெரிவித்தனர்.