புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:33 IST)

அவங்க கூட ஒரு போட்டோ மட்டும்.. ப்ளீஸ்! – இளைஞருடன் செல்பி எடுத்த சசிக்கலா!

பெங்களூரிலிருந்து சென்னை வந்து கொண்டிருக்கும் சசிக்கலா அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளது வைரலாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையாகி இன்று சென்னை வருகிறார். இந்நிலையில் அவர் பயணிக்கும் காரில் அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக உறுப்பினர் ஒரிவரின் காரின் மூலமாக அதிமுக கொடியுடன் பயணித்து வருகிறார் சசிக்கலா.

இந்நிலையில் சசிக்கலா செல்லும் வழிதடத்தில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் சசிக்கலா காரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். இதை கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் உடனே காரை நிறுத்தியதுடன் அந்த இளைஞரையும் பிடித்தனர். அந்த இளைஞர் சசிக்கலாவுடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

அவரை அருகே வர சொன்ன சசிக்கலா காரில் இருந்த படியே அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு எழுந்துள்ளது.