நோட்டிஸோடு நடையை கட்டிய போலீஸ்: சசிகலா காரில் பறக்கும் அதிமுக கொடி!!
சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் மட்டுமே வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துக் கொண்டிருக்கிறார்.
பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வருகிறார். அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது காவல்துறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழக எல்லையான ஒசூர் ஜூஜூவாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து சசிகலா வேறு காருக்கு மாறி, அதாவது கொடி அகற்றப்பட்ட நிலையில் வேறு ஒரு காரிலும் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையை வந்தடைந்தார் சசிகலா. மேலும், அங்கிருந்து சென்னையை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என செய்திகள் வெளியானது.
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது தொடர்பாக சசிகலாவுக்கு கிருஷ்ணகிரி போலீசார் நோட்டீஸ் மட்டுமே வழங்கியதாகவும் காரில் இருந்து அதிமுக கொடி அகற்றப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.