4 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக எல்லையில் நுழைந்தார் சசிகலா!
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆன நிலையில் தற்போது அவர் பெங்களூரில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார். பெங்களூரு தேவனஹள்ளி என்ற விடுதியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்து வந்தார்.
பின்னர் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்றும் அவரது காரின் பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் வரக்கூடாது என்றும் காவல்துறை உத்தரவு பிறப்பித்தும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ள காரில் புறப்பட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அதிமுக கொடியை காரிலிருந்து அகற்ற ஜூஜூவாடி எல்லையில் சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்கியது காவல்துறை. பின்னர் சசிகலா வந்த காரில் அதிமுக கொடி அகற்றப்பட்டு தமிழக எல்லையில் இருந்து வேறு காரில் மாற்றப்பட்ட சசிகலா 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழக எல்லையில் நுழைந்துள்ளார். இதனை அவரது தொண்டர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.