1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin says they won 234 constitutions

200 இல்ல 234 தொகுதிகளிலும் திமுகதான்! – சூசகமாக சொன்ன ஸ்டாலின்?

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அதிமுக தரப்பில் பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்நிலையில் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையிலும் கூட்டணி குறித்த முடிவுகள் எட்டப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரங்களில் மு.க.ஸ்டாலின் அடிக்கடி தமிழகத்தில் 200 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என கூறி வந்தார். சமீபத்தில் பேசிய அவர் 200 அல்ல 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என கூறியுள்ளார்.

திமுக கூட்டணி என்று குறிப்பிடாமல் வெறும் திமுக என்று மட்டும் குறிப்பிட்டிருப்பது தனித்து போட்டியிடுவதற்காக சூசக அறிவிப்பா என்பது போன்ற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்தியா வரும் சாம்சங் கேலக்ஸி ஏ12: என்னென்ன எதிர்பார்க்கலாம்?