எம்ஜிஆரே என்னிடம் தான் கருத்து கேட்பார்: சசிகலாவின் புதிய ஆடியோ!

sasikala
எம்ஜிஆரே என்னிடம் தான் கருத்து கேட்பார்: சசிகலாவின் புதிய ஆடியோ!
siva| Last Updated: வியாழன், 1 ஜூலை 2021 (19:41 IST)
எம்ஜிஆரே என்னிடம்தான் கருத்து கேட்பார் என சசிகலாவின் புதிய ஆடியோவில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில நாட்களாக சசிகலா தினந்தோறும் ஆடியோவை வெளியிட்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான இன்னொரு வீடியோவில் எம்ஜிஆரே என்னிடம் ஆலோசனை கேட்பார் என்றும் நான் சொல்லும் ஆலோசனைகளை எம்ஜிஆர் கவனத்துடன் கேட்டு கொண்டு அதன்படி நடப்பர் என்றும் கூறியுள்ளார்

மேலும் ஜெயலலிதா டென்ஷனாக இருக்கும்போது நான் தான் அவரை சமாதானப் படுத்தினேன் என்றும் கூறிய சசிகலாவை அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா என பிரிந்தபோது இரண்டையும் ஒருங்கிணைத்ததில் எனக்கு தான் மிகப் பெரிய பங்கு உண்டு என்று கூறினார்

இளம் வயதிலேயே அரசியல் அறிவோடு இருப்பதை பார்த்து எம்ஜிஆரை என்னை பாராட்டி இருக்கிறார் என்றும் நான் கூறும் பல விஷயங்களை அவர் ஒப்புக் கொண்டு அதன்படி நடந்து இருக்கிறார் என்றும் சசிகலா கூறியிருக்கிறார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இதில் மேலும் படிக்கவும் :