1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi Palanisamy says Sasikala has no relation with ADMK

சசிகலா 10 பேரிடம் பேசினாலும், 10,000 பேரிடம் பேசினாலும் கவலையில்லை - ஈபிஎஸ்!

சேலம்
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பட்டது. 

 
அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சசிகலா குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர், அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சசிகலா பத்து பேரிடம் பேசினாலும், பத்தாயிரம் பேரிடம் பேசினாலும் அதுபற்றி கவலை இல்லை என்று அதிமுக உறுதியாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
இன்று முதல் புதிய ‘ஸ்மார்ட்’ அட்டைகள் அச்சிடும் பணி தொடக்கம்: தமிழக அரசு அறிவிப்பு!