வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:38 IST)

மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு ஈபிஎஸ் எடுத்த தப்புக்கணக்கு அவருக்கு புரியும்: சசிகலா

மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி போட்ட தப்புக்கணக்கு அவருக்கு புரியும் என்று சசிகலா பேட்டி அழைத்துள்ளார். 
 
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாக்களித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சற்று முன் சசிகலா வாக்களிக்க வந்த நிலையில் அவர் தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் 
 
அப்போது அவர் கூறிய போது ’மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் போட்ட தப்புக்கணக்கு அவர்களுக்கே புரியும் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக சுட்டிக்காட்டி சசிகலா தெரிவித்தார் 
 
ஏற்கனவே மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுக எங்கள் வசமாகும் என்று ஓபிஎஸ் ஒரு புறமும் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக, தினகரன் தலைமைக்கு வரும் என்று அண்ணாமலையும் பேசிய நிலையில் சசிகலாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran