வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (14:52 IST)

அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

anbhumani
தமிழ் நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் என   
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.


பள்ளி மாணவர்கள் பள்ளி சீருடையுடன் மது அருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருவதை அடுத்து மாணவர்கள் சீருடையுடன் மது அருந்துவது தொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பள்ளி மாணவர்கள் மது அருந்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.