1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (13:04 IST)

ஈபிஎஸ் vs ஓபிஎஸ் - சசிகலா வந்ததும் போட்டி தூள் கிளப்பும்: ப.சி. ஆருடம்!

பிரதமர் மோடிக்கு அஞ்சி நடுங்கும் தமிழக ஆட்சியாளர்கள் அகற்றப்பட வேண்டும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

 
சமீபத்தில் தனது பேட்டியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம்,  பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் பெயரை கேட்டாலே தமிழக ஆட்சியாளர்கள் அஞ்சி நடுங்குகின்றனர். இவர்களால் எந்த பயணும் இல்லை. 
 
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் போட்டிப் போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து வருகின்றனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே உள்ள போட்டி 27 ஆம் தேதி நடைபெற உள்ள ஒரு சம்பவத்தை அடுத்து மேலும் தீவிரமடையும். 
 
மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சல் அதிமுக அரசுக்கு இல்லை. இதனால் நீட் தேர்வு, 2 வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை தமிழக ஆட்சியாளர்கள் ஆதரித்ததாக ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.