1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala One Week Tour Plan to Meet Supporters

சசிகலா ஒரு வாரம் சுற்றுப்பயணம் - ஆதரவாளர்களை சந்திக்க திட்டம்!

Sasikala
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 56 ஆவது குருபூஜை விழாவும் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.
 
இந்த நிலையில் அதிமுக மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணியின் இணைச் செயலாளர் சரவணன், அதிமுக மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளர், ஒன்றிய மாணவரணி செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் இணைந்து வரும் 29 ஆம் தேதி காலை 10.30 – 11 மணிக்க முத்துராமலிங்கனாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.
 
இதில், வி.கே.சசிகலாவும் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார் என தெரிவித்துள்ளார். எனவே, சசிகலாவுக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு மற்றும் வாகன அனுமதி வழங்கக்கோரி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மர்றும் மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.
 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அணியைச் சேர்ந்த அதிமுகவினர் சசிகலாவுக்கு ஆதரவாக மனு அளித்திருக்கும் சம்பவம் அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஆர்யன் கான் வழக்கை அவசர வழக்காக எடுக்க மும்பை நீதிமன்றம் ஒப்புதல்!