1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala Get Parole and Exit From Bangalore Prison

பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!

பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா!

சசிகலா
பெங்களூர் சிறையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் இருந்து வரும் சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் அளித்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் அவர் அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு சற்று முன்னர் வெளியே வந்தார்.


 
 
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் கேட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் மனு அளிக்கப்பட்டது. 
 
அதில் போதிய ஆவணங்கள் இல்லை என கூறி அவரது மனு சிறை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் சில ஆவணங்களை இணைத்து பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. இதனையடுத்து சசிகலா பரோல் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு தடையில்லா சான்றிதழ் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது கர்நாடக சிறைத்துறை. 
 
இந்த தடையில்லா சான்றிதழ் அளிப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்ட நிலையில் நேற்று சென்னை மாநகர காவல்துறை தடையில்லா சான்று அளித்துள்ளதாக கர்நாடக சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சசிகலா இன்று பரோலில் வெளிவருவது உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், தற்போது சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டும் பரோல் அளித்து சிறைத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சற்று முன்னர் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வெளியேறி சிறை வாயில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை வருகிறார்.
 
233 நாட்களுக்கு பின்னர் சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வரும் சசிகலா ஊடகங்களை சந்திக்க கூடாது, அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள கூடாது போன்ற நிபந்தனைகளுடன் வருகிறார். கார் மூலம் விமான நிலையத்துக்கு செல்லும் சசிகலா அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
ஏர்டெல் ஜியோவை அதிரவைக்கும் பி.எஸ்.என்.எல். ஆஃபர்