வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (12:19 IST)

அதிமுகவில் பரவும் காவி ; இது என்ன குறியீடு?

அதிமுக அரசு விழாக்களில், பாஜகவின் காவி நிறம் தென் படும் விவகாரம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தங்கள் பாக்கம் சாதமாக்கிக் கொள்ள பாஜக முயற்சி செய்வதாகவும், அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் பாஜகவை காலூன்ற அக்கட்சி முயல்வதாகவும் திமுக உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியல்வாதிகளின் நடத்தைகளும் அதை உறுதி செய்வதாகவே இருக்கிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட சில விழாக்களில் பாஜகவின் காவி நிறம் தென்பட்டது. அரசு தொடர்பான சில போஸ்டர்களிலும் காவி நிறம் தென்படு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில்  வெளியாகியுள்ளது.


 

 
இதன் மூலம் அதிமுகவில் கொஞ்சம் கொஞ்சமாக காவி நிறம் பரவி, இறுதியில் முழு காவியாக அதிமுக மாறிவிடும் என்பதையே இது காட்டுகிறது என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருப்பதாலேயே சிவப்பு நிறம் காவி நிறமாக தெரிகிறது. டெங்கு ஒழிப்பு தின கூட்டத்தில் இருந்தது காவிநிற பேனர் அல்ல, சிவப்பு நிற பேனர் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.