திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (11:40 IST)

எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசும் சசிகலா?: மீண்டும் கட்சியை கைப்பற்றுவாரா?

எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசும் சசிகலா?: மீண்டும் கட்சியை கைப்பற்றுவாரா?

சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பிரச்சனையால் மருத்துவமனையால் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை பார்க்க 15 நாட்கள் பரோலில் வருகிறார் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா.


 
 
சசிகலா சிறைக்கு செல்லும் முன்பு இருந்து அரசியல் சூழல் தற்போது முற்றிலும் மாறி ஒட்டுமொத்தமாக சசிகலா, தினகரனுக்கு எதிராக உள்ளது நிலைமை. அதிமுக கட்சியிம் தற்போது அவர்களது கட்டுப்பாட்டை விட்டு சென்றுவிட்டது.
 
தங்களால் முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியே தற்போது எதிராக மாறிவிட்டார். இப்படிப்பட்ட சூழலில் சிறையில் இருந்து பரோலில் வருகிறார் சசிகலா. சசிகலாவின் இந்த வருகை தமிழக அரசியலில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
 
சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவை ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சசிகலா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமே பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுக்க வைத்துவிட்டு சிறைக்கு சென்ற சசிகலாவை எடப்பாடி பழனிச்சாமி ஒருமுறை கூட சென்று பார்க்கவில்லை. பலமுறை நான் எடப்பாடிகிட்ட பேசணும் என சிறையில் இருக்கும் போது சசிகலா சொல்லி அனுப்பியும் எடப்பாடி அதனை பரிசீலிக்கவே இல்லை.
 
இதனால் தற்போது பரோலில் வரும் சசிகலா நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசுவார் என கூறப்படுகிறது. சசிகலா தற்போது குற்றவாளியாக பரோலில் வர உள்ளதால் முதல்வரை நேரில் சென்று சந்திக்க முடியாது என்பதால் போனில் தொடர்புகொண்டு பேசுவார் எனவும், எடப்பாடியும் பழைய நன்றியோடு சசிகலாவோடு பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
சசிகலா எடப்பாடியிடம் பேசிவிட்டால், எப்படியும் பேசி சரி செய்துவிடுவார் என்ற தகவலும் பரவி வருவதால் சசிகலா மீண்டும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவாரோ என அரசியல் வட்டாரத்தில் முனுமுனுக்கப்படுகிறது.