1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala direct dealing about AMMK actions would help TTV Dinakaran

செகெண்ட் இன்னிங்ஸ் கலக்குவாரா தினகரன்? சசிகலா டைரெக்ட் டீலிங்!!

சசிகலா
டிடிவி தினகரன் நேற்று சசிகலாவை சந்தித்து அமமுக நிர்வாக பட்டியலை வெளியிட ஒப்புதல் வாங்கியதாக கூறப்படுகிறது. 
 
அமமுகவை கட்சியாக பதிவு செய்த டிடிவி தினகரன், இப்போது கட்சியின் நிர்வாகிகளை நியமிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே செந்தில் பாலாஜி கட்சியைவிட்டு விலகிய நிலையில் சமீபத்தில் தங்க தமிழ்ச்செல்வனும் இசக்கி சுப்பையாவும் விலகினர். 
 
இந்நிலையில், ஏற்கனவே வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியலில் மாற்றத்தை மேற்கொண்டு புது பட்டியலை உருவாக்கியுள்ளார் தினகரன். இதற்கு ஒப்புதல் பெற நேற்று சசிகலாவை சந்தித்துள்ளார். ஆனால், சசிகலா நிர்வாகிகளின் பட்டியலில் பல மாற்றங்களை மேற்கொண்டாராம். 
அதேபோல், இனி எந்த முடிவு எடுத்தாலும் தன்னை கேட்டே எடுக்க வேண்டும் என்றும், என்னுடன் ஆலோசித்து பின்னர் முடிவுகளை வெளியில் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
ஜெயலலிதாவுடன் 30 வருஷம் இருந்திருக்கிறேன். அவரோட ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறேன். நிர்வாகிகள் விலகல் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. அடுத்து எடுக்கும் நடவடிக்கைகளை கவனமாக இருந்தால் மட்டுமே போதும் எனவும் தெரிவித்தாராம். 
தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதிமுக, திமுக தங்களது கட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி கொண்டு சென்றுள்ள நிலையில், இப்போது சசிகலா சிறையில் இருந்தாலும் நேரடியாக கட்சி பணிகளில் ஈடுப்பட்டிருப்பது அமமுகவை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
சிவன் கோவிலில் நடந்த ஓரின காதல் திருமணம்: பக்தர்கள் அதிர்ச்சி