செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (21:06 IST)

தினகரனுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர் - கலைச்செல்வன் எம்.எல்.ஏ அதிரடி

தினகரன் ஆதரவாளராக  இருந்தவர்  கலைச்செல்வன் எம்.எல்.ஏ. இவர் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக, தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு இவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில் தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட கலைச்செல்வன் எம்.எல்.ஏ , சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
ஜெயலலிதா அமைத்த ஆட்சியை கலைக்க தினகரன் கூறியதை என்னால் ஏற்றுக்கொள்வில்லை. நான் அதிமுகவுக்கு ஆதரவாக இருப்பேன். அதிமுவில் எங்களுக்கும்  அண்னன் தம்பி பிரச்சனைதான். ஆட்சி கலைப்புக்கு யாரும் சம்மதிக்கமாட்டார்கள்.  முதல்வர் கூறுவதைக் கேட்டு செயல்படுவோம். மேலும் மக்களவைத் தேர்தலில் மக்கள் தினகரனுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர் என்று தெரிவித்தார்.
 
கலைச்செல்வன் எம்.எல்.ஏ முதல்வரை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தினகரன் ஆதரவாளராக கருதப்பட்ட இவர் அதிமுக கட்சிக்கு ஆதரவளித்துள்ளார் என்பதால் தினகரன் கட்சியினர் தற்போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே தினகரன் ஆதரவாளராகக் கருதப்பட்ட  ரத்தினசபாபதி எம்.எல்.ஏ நேற்று முதல்வரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.