செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 20 நவம்பர் 2020 (13:34 IST)

சசிகலாவிற்கு விடுதலை சலுகைகள் மறுக்கப்படுவது ஏன்?

சசிகலாவிற்கு விடுதலை சலுகைகள் மறுக்கப்படுவது ஏன் என அடுத்த கேள்வி எழுந்துள்ளது. 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது. 
 
சசிகலா ஜனவரி 27ஆம் தேதி விடுவிக்கப்படுவார் என்று ஏற்கனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு சலுகை வழங்குவதில் எந்த தடையும் இல்லை.  
 
இதன்படி, பார்த்தால் இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டியது உள்ளது. சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் அவருக்கு 129 நாட்கள் சலுகை உள்ளது.
ஏற்கனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர்களுக்கு கர்நாடக மாநில சிறைத்துறை சலுகை வழங்கியது குறித்தும்  ஆதாரங்களை தாக்கல் செய்துள்ளோம். எனவே சசிகலாவிற்கு சலுகைகள் வழங்க கோரியுள்ளோம். நல்ல முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம் என சசிகலாவின் வக்கீல் நம்பிக்கை தெரிவித்திருந்தார். 
 
ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலுள்ள சசிகலாவுக்கு விடுதலையில் சிறப்பு சலுகை இல்லை என கர்நாடக உள்துறை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவிற்கு விடுதலை சலுகைகள் மறுக்கப்படுவது ஏன் என அடுத்த கேள்வி எழுந்துள்ளது. 
 
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர்களுக்கு கர்நாடக மாநில சிறைத்துறை சலுகை வழங்கிய நிலையில் வாய்ப்புகள் இருந்தும் சசிகலாவிற்கு சலுகைகள் வழங்கப்படாது என திட்டவட்டமாக கூறப்படுவதற்கான காரணம் என்னவென்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளது.