செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (09:29 IST)

கொரோனா வைரஸ் அறிகுறி: 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த இளைஞர்

நாடு முழுவதும் 150 பேர்களுக்கும் மேலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து டெல்லி வந்த 35 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது 
 
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு 14 மருத்துவ கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பதும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதன் பின் மீண்டும் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் நேற்றிரவு மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் மன உளைச்சல் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மருத்துவர்கள் மற்றும் உறவினர்களின் பொறுப்பு என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்