செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (08:39 IST)

கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்குமா ? அதிர்ச்சியளிக்கும் தகவல் !

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு விந்தனு உற்பத்தி பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதனால் பலி ஆனவர்களின் எண்ணிக்கை 8000 ஐ தாண்டியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இப்போது புதிதாக இந்த வைரஸ் தாக்கப்பட்ட ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு செய்து வரும் பேராசிரியர் லி யுஃபெங் “கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வைரஸை சோதனை செய்ததில் ஆண்களின் விந்தணுக்களையும் தாக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்ற அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார்.

ஆனால் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களை ஆய்வு செய்த பின்னரே அதுகுறித்து கூற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.