சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கினேன்... அதேமாதிரி ராதிகாவை எம்.பி.ஆக்குவேன் - சரத்குமார்
சூரியவம்சம் படத்தில் என் மனைவியை கலெக்டர் ஆக்கினேன், அதேபோல் நிலத்தில் என் மனைவியை எம்பியாக்குவேன் சரத்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைத்து கொண்ட சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் ராதிகா பேட்டியளித்த போது பிரதமர் மோடி அளித்த பல திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவில்லை, நான் எம்பி ஆனால் அந்த திட்டங்களை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர பாடுபடுவேன் என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து விருதுநகர் தொகுதியில் நீங்கள் போட்டு விடாமல் ராதிகாவை போட்டியிட வைப்பது ஏன் என்று கேட்டதற்கு பெண்கள் பதவிக்கு வந்தால் தான் நாட்டின் நலம் பெரிதாக இருக்கும், பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் பெண்கள் தான் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும்.
இந்த தொகுதியில் நான் போட்டியிடுவதும் எனது மனைவி போட்டியிடுவதும் ஒன்றுதான். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார் அந்த வகையில் என்னுடைய வெற்றிக்கு பின்னாலும் ராதிகா இருக்கிறார் என்பதால் தான் அவரை போட்டியிட வைத்துள்ளேன்,
சூரியவம்சம் திரைப்படத்தில் எனது மனைவி கேரக்டரில் நடித்தவரை கலெக்டர் ஆக்கினேன் அதேபோல் நிஜத்தில் என் மனைவி ராதிகாவை எம்பி ஆக்குவேன் என்றும் அவர் கூறினார்.