வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (14:54 IST)

தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்.. ராதிகா சரத்குமார்

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும் என்றும் ஒரு தேசிய கட்சியில் இணைந்தது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் இன்று கன்னியாகுமரியில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் ராதிகா சரத்குமார் பேசியுள்ளார். 
 
ஒரு தேசிய கட்சியுடன் இணைந்து மேடையில் பேசும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் தலைவன் நன்றாக இருக்க வேண்டும் எனவே தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிடம் நான் பாஜக மலர வேண்டும் என்று தெரிவித்தார் 
 
அது மட்டுமின்றி 2026 தேர்தலை இலக்காக கொண்டு நாம் செயல்பட வேண்டும் என்றும் நமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி பால் எது தண்ணீர் எது என்று தெரிந்து கொண்டு அன்னப்பறவை செயல்படும்போது போல் நாமும் நல்லது கெட்டதுகளை தெரிந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார் 
 
அண்ணாமலையிடம் எனக்கு அதிகமாக பழக்கம் இல்லை ஆனால் என் கணவருக்கு அண்ணாமலையுடன் நல்ல பழக்கம் உண்டு, பாஜக கண்டெடுத்த சிப்பிக்குள் முத்து தான் அண்ணாமலை என்று அவர் புகழாரம் சூட்டினார்
 
Edited by Mahendran