தொடர்புடைய செய்திகள்
- கர்நாடக, கேரள மாநிலங்களில் பொது போக்குவரத்து துவங்க முடிவு!
- வழிப்பாட்டு தலங்களை திறந்தால் பிரச்சினை வரும்! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
- தேர்வு வேணாம்னு சொல்லல.. இப்போ வேணாம்னுதான் சொல்றேன்! – மு.க.ஸ்டாலின் அறிக்கை
- தமிழகத்தில் தியேட்டர்களை திறக்கலாமா? அமைச்சர் ஆலோசனை!
- விவசாயிகளுக்கு கரண்ட் தருவது எங்க இஷ்டம்!– பிரதமருக்கு எடப்பாடியார் கடிதம்!
போங்கடா டேய் போய் முடிய வெட்டுங்க: சலூன் கடைகள் திறப்பு!!
ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதனால் முடிதிருத்தும் தொழிலை நம்பி இருக்கும் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் முதல்வர்களுக்கு கடையை திறக்க அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர்.
எனவே, முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை. சென்னை, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சலூன் கடைகளை திறக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
