வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 பிப்ரவரி 2021 (08:51 IST)

சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் காலமானார்!

சேலம் சித்த வைத்தியர் சிவராஜ் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

தொலைக்காட்சிகளில் தோன்றி இளைஞர்களுக்கான பாலியல் சந்தேகங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்து பிரபலமானவர் சேலம் சித்த வைத்தியர் சிவராஜ். இவர் பதிலளிக்கும் போது இளைஞர்களைக் குறிப்பிட்டு பேராண்டிகளா என அழைப்பது இளைஞர்கள் மத்தியில் பிரபலம்.

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நள்ளிரவு காலமானார். இதையடுத்து அவரது உடல் அகஸ்தியர் மாளிகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.