விவசாயிகள் கடன் ரத்து: முதல்வரின் சேலம் மாவட்டத்தில் மட்டும் இத்தனை கோடியா?
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு காரணமாக 12,000 கோடி பயிர் கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட உள்ளதாகவும் அதில் அதிகபட்சமாக சேலம் கூட்டுறவு வங்கிகள் இருந்து மட்டும் 1329 கோடி ரூபாய் பயிர்கடன் பயிர் கடன் தள்ளுபடி செய்யப் பட உள்ளதாகவும் தெரிகிறது
தமிழக கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் 22 கூட்டுறவு வங்கிகளில் 12 ஆயிரத்து 110 கோடியே 74 லட்சம் ரூபாய் பயிர் கடன் நிலுவையில் உள்ளது. இதில் அதிகபட்சமாக சேலம் கூட்டுறவு வங்கியில் 1329 கோடி ரூபாய் பயிர் கடனும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 1042 ரூபாய் பயிர் கடன் நிலுவையில் உள்ளன
மேலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை திருச்சி கும்பகோணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 2400 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 300க்கும் அதிகமான கோடிரூபாய் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது