வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:31 IST)

பள்ளி மாணவர்களுக்கு 40 லட்ச ரூபாய் மதிப்பில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை!

9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளி திறக்கப்படும் நிலையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஜனவரி 19 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. மாஸ்க் அணிய வேண்டும், சானிடைசர் பயன்படுத்த வேண்டும், ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்பட ஒரு சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தமிழகம் முழுவதும் ஜனவரி 19 ஆம் தேதி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாளை முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கு 40 லட்ச ரூபாய் மதிப்பில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 19 லட்சம் மாணவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.