அரசாணைக்குதான் தடையாம்; எட்டுவழி சாலைக்கு இல்லையாம்! – புதிய திருப்பம்!
சேலம் எட்டுவழி சாலைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் எட்டு வழிசாலைக்கான அரசாணைக்குதான் தடை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் எட்டுவழிசாலை அமைக்க நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை விடுத்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அரசின் அரசாணையை தடை செய்து உத்தரவிடப்பட்டது. இதன் மீதான மேல்முறையீடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணைக்கு விதித்த தடை தொடரும் என்றே தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் எட்டுவழிசாலைக்கு தடை இல்லை என்றும், தேவையான சுற்றுசூழல் அனுமதி பெற்று புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு எட்டுவழிசாலை பணிகளை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் எட்டுவழிசாலை தடை செய்யப்பட்டதாக எண்ணி கொண்டாடிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.