1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today gold price in Chennai

திடீரென உச்சத்தை தொட்ட தங்கம் விலை! – இன்றைய நிலவரம்!

Tamilnadu
கடந்த சில நாட்களில் மெல்ல விலை குறைந்து வந்த தங்கம் விலை இன்று திடீரென அதிக தொகைக்கு விலை உயர்ந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   

இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை தீபாவளிக்கு பிறகு ஒரு வாரத்திற்கு விலையில் சரிவை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஏற்றத்தை கண்டுள்ளது. 

இன்றைய நிலவரப்படி தங்கம் சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ரூ.37,864க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.97 ரூபாய் உயர்ந்து ரூ.4,733க்கு விற்பனையாகி வருகிறது.
About Writer
Prasanth Karthick