வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (09:48 IST)

ஓயாத கொரோனா பணிகள்; லீவு எடுத்துக்கோங்க! – சேலம் போலீஸ் மகிழ்ச்சி!

தமிழகத்தில் இடைவிடாத கொரோனா ஊரடங்கு பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு விடுப்பு அளிப்பதாக சேலம் மாவட்ட காவல் ஆணையர் அறிவித்திருப்பது காவலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காவலர்கள் சிலருக்கே கொரோனா தொற்று ஏற்படுவதும், பலர் ஓய்வின்றி தீவிர காவல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதாலும் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சேலம் மாநகர காவல் சராகத்திற்குட்பட்ட காவலர்களுக்கு 6 நாட்கள் பணியும் ஒரு நாள் விடுமுறையும் வழங்க சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஒரே சமயத்தில் அனைவரும் விடுப்பு எடுக்கும் நிலை வராமல் இருக்க வாரத்தின் ஒவ்வொரு நாட்களில் குறிப்பிட்ட அளவு காவலர்களுக்கு விடுப்பு வழங்கப்படும். இதனால் காவல் பணிகளும் பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.