1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (12:27 IST)

டம்ளரை சோப்பு போட்டு கழுவணும் : டீக்கடைகளுக்கு புதிய உத்தரவு!

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகள், உணவகங்களுக்கு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸுக்கு 166 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. விழுப்புரத்திலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், டெல்லியிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அன்றாடம் புழங்கும் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக டீக்கடைகளில் கண்ணாடி டம்ளர்களில் அனைவரும் டீ பருகுவதால் அதன்மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனால் டீக்கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி டீக்கடைகள் உணவகங்களில் பயன்படுத்தப்படும் டம்ளர்களை சோப்பு ஆயில், சூடான தண்ணீர் கொண்டு கழுவ உத்தரவிடப்பட்டுள்ளது. டீக்கடைகள் இந்த விதிமுறையை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை அதிகாரிகள் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகிறது.