1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (11:26 IST)

கொஞ்சம் கூட பயமே இல்ல... கூட்டத்தை கூட்டி ஸ்டாலின் செய்ததை பாருங்க...

கொளத்தூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை திரட்டி லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவங்களையும், அங்கன் வாடிகள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதிவரை மூட உத்தரவிட்டுள்ளது. 
 
இதில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரியில் தொடர்ந்து இயங்கும் எனவும் திட்டமிட்டபடி 10 ஆம் , மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நடக்கும் எனவும் அத்தியாவசிய பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கூட்டங்கள், விளையாட்டுகள், தேவாலயம், மசூதிகள், கோவில்களில் , மாநாடுகள், சுற்றுலா ரிசார்டுகள், ஒன்றுகூடும் இடங்கள், நீச்சம் குளம், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், கருத்தரங்குகள், , ஏற்கனவே திட்டமிட்ட திருமண நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்தக்கூடது. உடற்பயிற்சி கூடங்கள், அரசியல் கூட்டங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளது.
 
ஆனால், இதை மீறி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது கொளத்தூர் தொகுதியில் மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் கொரோனோ நோய் பரவலைத் தடுக்கும் முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.