செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (11:40 IST)

மோடி பெயரில் போலி ட்வீட்: லீவ் எடுக்க இப்படி ஒரு ரூட்டா?

பிரதமர் மோடி பெயரில் விடுமுறை அளிக்க சொல்லி மதுரை காமராஜர் பல்கலைகழகத்துக்கு வாட்ஸ் அப்பில் வந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல அரசு அலுவலகங்கள் மற்று ஐடி நிறுவனங்களிலும் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் கிருஷ்ணனுக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவில் இடம் பெற்றிருப்பது போல தயார் செய்யப்பட்டுள்ள அந்த செய்தியில் உடனடியாக காமராஜ் பல்கலைகழகத்தை மூடும்படி பிரதமர் மோடியே நேரடியாக தெரிவித்திருப்பது போல தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆராய்ந்த போது மோடியின் இந்த ட்வீட் போலியானது என்பதை கண்டறிந்த துணை வேந்தர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விடுப்பு வேண்டி பல்கலைகழக ஊழியர்கள் யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.