வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 டிசம்பர் 2025 (16:15 IST)

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

sengottaiyan
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்யின் ஈரோடு சுற்றுப்பயண தேதி, டிசம்பர் 16-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 18-ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. காவல் துறை விதித்த 84 விதிமுறைகளுக்கு பதிலளிப்பதில் ஏற்பட்ட காலதாமதமே இதற்கு முக்கிய காரணம் என்று தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
 
விஜய்யின் பிரமாண்ப் பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல் கேட் அருகே உள்ள 'சரளை' என்ற இடத்தில் நடைபெறும். கூட்டம் காலை 11 மணி முதல் 1 மணிக்குள் நடைபெறும் என்றும், இதற்கு எந்த தடையும் இல்லை என்றும் செங்கோட்டையன் உறுதிப்படுத்தினார்.
 
கூட்டணி குறித்து பேசிய அவர், விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றவர்கள் மட்டுமே கூட்டணிக்கு வரலாம் என்றும், கூட்டணி குறித்து விஜய் முடிவெடுப்பார் என்றும் தெளிவுபடுத்தினார். 
 
அரசு விதித்த அனைத்துக் கட்டுப்பாடுகளின்படியும் கூட்ட ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
Edited by Mahendran