திங்கள், 13 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2026 (19:29 IST)

மினிமம் பேலன்ஸ் இல்ல!. மக்களிடமிருந்து 19 ஆயிரம் கோடி அபராதம்!...

money
தனியார் மற்றும் அரசு என எந்த வங்கியாக இருந்தாலும் குறைந்தபட்சம் குறிப்பிட்ட தொகையை வங்கி கணக்குகளில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் விதிமுறை இருக்கிறது. அதேநேரம் அதை எல்லோரும் பின்பற்றுவதில்லை.. குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் அதை பின்பற்றுவதில்லை. அல்லது பின்பற்ற முடியவில்லை. அதற்கு காரணம் அவர்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் பண தேவைகள் என்று சொல்லலாம்..

நடுத்தரவர்க்க மற்றும் ஏழை மக்களில் பெரும்பாலானோர் மினிமம் பேலன்ஸ் என சொல்லப்படும் குறைந்தபட்ச இருப்பு தொகையை   வங்கி கணக்கில் பராமரிப்பதில்லை. எனவே, அவர்களிடம் வங்கிகள் ஒரு குறிப்பிட்ட அபராத தொகை வசூலிக்கிறது
.
அந்த வகையில் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை எனக் கூறி வாடிக்கையாளர்களுக்கு 19 ஆயிரம் கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அதுவும், 3 ஆண்டுகளில் மட்டும் 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவு தனியார் வங்கிகள் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது..