செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (08:50 IST)

சேகரு நீங்கதான் பேசறீங்களா? – இந்தி வாலாவை வறுத்தெடுத்த எஸ்வி சேகர்

ஜெயம்கொண்டம் வங்கி மேனேஜர் இந்தி தெரியாததை காரணம் காட்டி லோன் மறுத்த சம்பவத்திற்கு எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேனெஜராக பணியாற்றி வந்த விஷால் நாராயண் காம்ளே என்பவர், வங்கியில் லோன் கேட்டு வந்த மருத்துவருக்கு இந்தி தெரியததால் லோன் தர முடியாது என மறுத்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து அந்த மேனேஜர் திருச்சி வங்கி கிளைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மொழி வெறியுடன் நடந்து கொண்டதாக அந்த மேனேஜர் மீது பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் “இப்படிப்பட்ட மொழி வெறியனுக்கு பணியிட மாற்றத்தைவிட பணியிடை நீக்கம்தான் சரியான தண்டனை” என்று கூறியுள்ளார்.

மூன்றாவது மொழியாக இந்தியை கொண்டு வர பாஜக பிரபலங்கள் ஆதரவு குரல் கொடுத்து வரும் நிலையில், இந்தி தொடர்பாக நடந்த இந்த சம்பவத்திற்கு எஸ்.வி.சேகர் கண்டனம் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.